APPLY NOW

                                                 

Annual Sports Day – 2K24

ஜெ.பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா தென்காசி மாவட்டம் ஆய்க்குடி ஜெ.பீ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வா் முனைவர் ஜ.மைக்கேல் மரியதாஸ் அவர்கள் தலைமையேற்றார். கல்லூரி நிர்வாகி அருட்சகோதரி பி.ஹேம்லெட் அவர்கள் முன்னிலை வகித்தார். விளையாட்டுவிழா ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டு விளையாட்டில் சிறந்த மாணவர்களை பாராட்டி மாவட்ட அளவிலும் கல்லூரி அளவிலும் சாதனைப் படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டுத்துறை தலைமை அலுவலர் என்.ஏ.ஜெயரத்னராஜன் அவர்களும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குநர் எஸ். ஆறுமுகம் அவா்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவா்களை உற்சாகப்படுத்தி உரையாற்றினர். சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வினை மக்கள் தொடர்பு அதிகாரி ஜெ. மனோகரன் சாமுவேல் அவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Top